‛கூலி' படத்திலிருந்து ‛மோனிகா' பாடல் வெளியீடு | கொடைக்கானல் மலை கிராமம் பின்னணியில் உருவாகும் 'கெவி' | மகிழ்ச்சியாக இருக்கிறேன், பேச்சு வரலை : விஜய்சேதுபதி மகன் உருக்கம் | வித்யா பாலனுக்கு நன்றி சொன்ன மலையாள காமெடி நடிகர் | திருமணத்தின் போதே கர்ப்பமாக இருந்தேன் ; பாலிவுட் நடிகை நேஹா துபியா ஓபன் டாக் | காலில் செருப்பு அணியாமல் என்னை பக்குவப்படுத்திக் கொள்கிறேன் : விஜய் ஆண்டனி | பூட்டிய வீட்டில் இறந்து கிடந்த பாக்., நடிகை; 9 மாதங்களுக்கு பிறகே கண்டுபிடித்த போலீசார் | மேலாளரை உன்னி முகுந்தன் தாக்கவில்லை ; நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்த போலீசார் | ரஜினி ஒரு புத்திசாலி, கத்தியைப் போல கூர்மையானவர் : ஸ்ருதிஹாசன் | அல்லு அர்ஜுன், அட்லி படத்தில் வில்லனாகும் ஹாலிவுட் நடிகர் |
தமிழ் சினிமாவில் கொரானோ ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதும் 'மாஸ்டர்' எப்போது வருவார் என தியேட்டர்காரர்கள், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
'மாஸ்டர்' பட வெளியீடு பற்றிய அறிவிப்பு அவர்களை மகிழ்வித்தது. அதே சமயம் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பது தியேட்டர்காரர்களை தயக்கத்தில் ஆழ்த்தியது.
இருப்பினும் அந்த தயக்கங்களையும் மீறி மக்கள் தியேட்டர்கள் பக்கம் வந்தனர். மூன்று நாட்களில் 100 கோடி, ஆறு நாட்களில் 150 கோடி என 'மாஸ்டர்' பற்றிய வசூல் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.
தற்போது 200 கோடி வசூலை நோக்கி செல்வதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. 50 சதவீத இருக்கைகளில் இவ்வளவு வசூலைப் பெற்று ஆச்சரியப்படுத்திவிட்டது இந்தப் படம். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு வாரத்திலேயே 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆந்திரா, தெலங்கானாவில் 21 கோடி, கர்நாடகாவில் 15 கோடி, கேரளாவில் 10 கோடி, வட இந்தியாவில் 5 கோடி, வெளிநாடுகளில் 37 கோடி என இதுவரையிலும் வசூல் 188 கோடியைத் தாண்டிவிட்டதாம். இந்த வார இறுதிக்குள் 200 கோடியைக் கடந்துவிடும் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் படம் லாபத்தைக் கொடுப்பது உறுதி என்பதால் படத்தை வாங்கியவர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்களாம்.
'மாஸ்டர்' கொடுத்த தைரியம் மற்ற மொழிகளிலும் முன்னணி நடிகர்கள் தங்கள் படங்களை தியேட்டர் வெளியீட்டிற்குத் தயார் செய்யுங்கள் என்று கூறி வருவதுதான் இப்படத்திற்குக் கிடைத்த முக்கிய வெற்றி என தமிழ் சினிமா பெருமை கொள்ளலாம் என்றே கருதுகிறார்கள்.