சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

சிவா இயக்க, அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் மற்றும் பலர் நடிக்க 2015ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற படம் 'வேதாளம்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்து நடிக்க சிரஞ்சீவி ஆசைப்பட்டார். மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாக இப்படத்திற்கான கதை விவாதம் கூட நடந்து முடிந்ததாகத் தகவல் வெளியானது.
சிரஞ்சீவியின் தங்கை கதாபாத்திரத்தில் நடிக்க கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகியோரிடம் கூட பேச்சு வார்த்தை நடத்தியதாகச் சொன்னார்கள். இதனிடையே, தற்போது நடித்து வரும் 'ஆச்சார்யா' படத்திற்குப் பிறகு 'லூசிபர்' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கத் தயாராகிவிட்டார் சிரஞ்சீவி. இதற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கி உள்ளது.
'வேதாளம்' ரீமேக்கை தள்ளி வைத்துவிட்டார் எனச் சொல்கிறார்கள். இப்படத்திற்காக அதிரடியான சண்டைக் காட்சிகளில் நடிக்க வேண்டி உள்ளதால், கொரோனா தொற்று மிகவும் குறைந்த பிறகு இப்படத்தில் நடிக்கலாம் என அவர் முடிவு செய்துள்ளார் என்கிறார்கள்.
சில வருட இடைவெளிக்குப் பிறகு விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம்தான் சிரஞ்சீவி ரீ-என்ட்ரி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.




