இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
இயக்குனர் கே.பாக்யராஜின் மகனான சாந்தனு முருங்கைக்காய் சிப்ஸ், கசடதபற உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். அதோடு விஜய் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திலும் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்நிலையில், மாஸ்டர் படத்தைப்பற்றி அப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனனை விட, சிறிய வேடங்களில் நடித்த சாந்தனு, விஜய் டிவி தீனா, 96 படத்தின் நடித்த கெளரி ஆகியோர் தான் மீடியாக்களில் பெரிய அளவில் படத்தைப்பற்றி பேசி வந்தனர்.
ரசிகர் ஒருவர், ''மாஸ்டர் படத்தில் பூனை அளவுக்குகூட உங்களுக்கு காட்சி இல்லை. ஊறுகாய் மாதிரி கூட நீங்கள் பயன்படுத்தப்படவில்லை. பிறகு எதற்கு இத்தனை பில்டப் கொடுக்கிறீர்கள்? என்று கேட்டு சாந்தனுவை கிண்டல் செய்து சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு சாந்தனு, ''கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்ற கணக்கில் ஒரு காட்சியோ, ஒரு படமோ அதுவே ஒரு சாதனை தான்'' என்று பதில் கொடுத்துள்ளார்.