என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

தமிழ் சினிமாவில் ஏவிஎம் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக படங்களை தயாரித்துள்ள நிறுவனம் சூப்பர்குட் பிலிம்ஸ். இதன் நிறுவனர் ஆர்.பி.சவுத்திரி. இந்த நிறுவனத்தின் 90வது படமாக களத்தில் சந்திப்போம் தயாராகி உள்ளது. இதில் சவுத்ரியின் மகனும், நடிகருமான ஜீவா, அருள்நிதி இணைந்து நடித்துள்ளனர். 
இதுகுறித்து ஆர்.பி.சவுத்ரி அளித்த பேட்டி வருமாறு: எங்கள் நிறுவனத்தின் 90வது படம் களத்தில் சந்திப்போம். இதுவரை நாங்கள் குடும்ப பாங்கான படங்களையே தயாரித்து வந்துள்ளோம். ஆனால் இன்றைக்கு டிரண்ட் மாறிவிட்டது. அதனால் காலத்துக்கு ஏற்ப நாங்களும் மாறி இளைஞர்களுக்கும் பிடிக்கும் வகையில் களத்தில் சந்திப்போம் படத்தை உருவாக்கி உள்ளோம். சூப்பர்குட் நிறுவனம் புதிய இயக்குனர்களை கொண்டுதான் அதிக படங்களை தயாரித்துள்ளது. அந்த வரிசையில் இப்போது என்.ராஜசேகரை அறிமுகப்படுத்துகிறோம்.
இதுவரை ஆண்டுக்கு 4 படங்கள் வரை தயாரித்தோம். இடையில் சிறிய கேப் விழுந்தது. காரணம் இப்போது படம் தயாரிப்பதை விட அதை வெளியிடுவது மிகவும் சிரமமான வேலையாக மாறிவிட்டது. படப்பிடிப்பு செலவும், நடிகர் நடிகைகளின் சம்பளமும் அதிகரித்து விட்டது. இப்போது எல்லாம் ஒரு கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் இனி ஆண்டுக்கு 2 படங்கள் தயாரிக்க முடிவு செய்திருக்கிறோம்.
இந்த படம் தவிர வேறு இரண்டு படங்கள் தயாரிப்பில் உள்ளது. மலையாளத்தில் வெளிவந்த லூசிபர் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்கிறோம். இதில் சிரஞ்சீவி, நயன்தாரா நடிக்கிறார்கள், மோகன்ராஜா இயக்குகிறார். இது எங்களின் 93வது படமாகும். 
விஜய் எங்கள் ஹீரோ. அவருக்கு 6 சூப்பர் ஹிட் படங்களை எங்கள் நிறுவனம் கொடுத்துள்ளது. விரைவில் நாங்கள் 100வது படத்தை எட்டிவிடுவோம். 100வது படத்தை பிரமாண்டமாக தயாரிப்போம். அதில் விஜய் நடிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை அதற்கு முன்புகூட அவர் நடிக்கலாம் என்றார். 
 
           
             
           
             
           
             
           
            