துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
பழம்பெரும் மலையாள நடிகர் உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி. வாழும் மலையாள நடிகர்களில் மூத்தவர். தேசாதனம், ஓரால் மந்திரம், களியாட்டம், ராப்பகல், கல்யாணராமன் உள்பட பல படங்களில் நடித்தார். சினிமாவில் அறிமுகமாகும்போதே அப்பா, தாத்தா வேடங்களில் தான் அறிமுகமானார். தமிழில் பம்மல் கே.சம்ந்தம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சந்திரமுகி படங்களில் நடித்துள்ளார்.
98 வயதான உன்னி கிருஷ்ணனுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து கண்ணூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று வந்துள்ளது.
ஆனாலும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 98 வயது முதியவர் கொரோனவில் இருந்து மீண்டது கேரளாவில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.