மறக்க முடியுமா? - சண்டக்கோழி | வருமானவரி சோதனை குறித்து டாப்சி கிண்டல் | 'காப்பி' சர்ச்சையில் சாய் பல்லவி நடித்த 'சாரங்க தரியா' பாடல் | ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை? | ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ் | காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன் | கிரிக்கெட் வீரர் பும்ராவுடன் அனுபமா பரமேஸ்வரனுக்கு திருமணமா? | சொந்த 'கேரவன்' வாங்கிய மகேஷ் பாபு | தியேட்டர்காரர்களின் நெஞ்சைக் குளிர வைத்த 'நெஞ்சம் மறப்பதில்லை' | தெலுங்கில் ரீமேக் ஆகும் களத்தில் சந்திப்போம் |
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வந்த நடிகர் சுரேஷ்கோபி, அதன்பிறகு சினிமாவை விட்டு சிலகாலம் ஒதுங்கி அரசியலில் அடியெடுத்து வைத்தார்.. இந்தநிலையில் மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ள சுரேஷ்கோபி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு துல்கர் சல்மானுடன் இணைந்து வரனே ஆவசியமுண்டு என்கிற படத்தில் நடித்திருந்தார். தற்போது அவரது 249 ஆவது படமாக காவல் என்கிற படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் அவர் நடிக்கும் 250வது படமாக 'ஒத்தக்கொம்பன்' என்கிற படம் உருவாக இருக்கிறது.
பிரமாண்டமான படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தை அறிமுக இயக்குனர் மேத்யூ தாமஸ் என்பவர் தான் இயக்கவுள்ளார். மலையாளத்தில் மோகன்லாலின் புலி முருகன், திலீப்பின் ராம்லீலா உள்ளிட்ட நூறு கோடி வசூலித்த பிரமாண்ட படங்களை தயாரித்த தோமிச்சன் முளக்குப்பாடம் என்பவர் தான் இந்தப்படத்தை தயாரிக்கிறார். இந்தநிலையில் சமீபத்தில் சுரேஷ்கோபியை சந்தித்த தயாரிப்பாளர் தோமிச்சன் விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என கூறியுள்ளார். மேலும் இயக்குனரும் தானும் சேர்ந்து சுரேஷ்கோபியை சந்தித்த புகைப்படத்தையும் வெளியிட்டு இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.