துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்று அசத்திய அஜித் | மகளிர் தினம் : சமந்தா எடுத்த புதிய சவால் | விஜய் சேதுபதிக்கு நன்றி சொன்ன வி.ஜே.லோகேஷ் | சிம்புவின் மாநாடு ரிலீஸ் எப்போது? | திருமணம் குறித்த கேள்வி : வரலட்சுமி காட்டம் | 3 நாளில் 6 மில்லியனை கடந்த காடன் டிரைலர் | இயக்குனர் புறக்கணிப்பு : விஜய் சேதுபதி தலையிடுவாரா? | புகழ் காரில் வைக்க விநாயகர் கொடுத்த சந்தானம் | சகுந்தலம் - சமந்தா ஜோடியாக தேவ் மோகன் | ரூ.100 கோடி வசூலித்து 'உப்பெனா' சாதனை |
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோவாக நடித்து வருபவர் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யா. கடந்த சில வருடங்களுக்கு முன் விக்ரம் குமார் இயக்கத்தில் மனம் என்கிற படத்தில் நடித்த நாகசைதன்யா தற்போது, மீண்டு அவரது இயக்கத்தில் 'தேங்க்யூ' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் அவர் ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கிறார். சமீபத்தில் ஹாக்கி மட்டையை கையில் வைத்தபடி விளையாட்டு களத்தில் நிற்கும் நாகசைதன்யாவின் புகைப்படம் வெளியானது.
அவர் நடித்துவரும் இன்னொரு படமான லவ் ஸ்டோரியில் தான் அவர் ஹாக்கி வீராராக நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும், தற்போது அது தேங்க்யூ படத்திற்காகத்தான் என உறுதியாகி உள்ளது. இந்தநிலையில் இவரது கதாபாத்திரம் குறித்த இன்னொரு ஆச்சர்ய தகவலும் கசிந்துள்ளது. ஆம்.. இந்தப்படத்தில் நடிகர் மகேஷ்பாபுவின் ரசிகர்மன்ற தலைவராகவும் நடிக்கிறாராம் நாகசைதன்யா. விளையாட்டு வீரர், ரசிகர்மன்ற தலைவர் என கல்லூரி கதைக்களத்தில் உருவாகிறதாம் இந்தப்படம்.