சினிமாவை விட்டு விலக நினைத்த இயக்குனர் ஷபியை மீட்டு அழைத்து வந்த விக்ரம் | நடிகர் மணிகண்டனுக்கு கேட்காமலேயே இருமுறை வாழ்நாள் உதவி செய்த விஜய்சேதுபதி | புதிய படத்தால் பழைய பாவங்களை கழுவப்போகிறேன் ; ராம்கோபால் வர்மா | 'துருவ நட்சத்திரம்' ரிலீஸ் : கவுதம் மேனன் தகவல் | அஜித்துக்குப் போட்டியாக அறிவிக்கப்பட்ட விஜய் படத் தலைப்பு | அபிராமிக்கு சிபாரிசு கடிதம் தர மறுத்த கமல் | ‛அலைபாயுதே' படத்தின் ரகசியத்தை முதல்முறையாக பகிர்ந்த மணிரத்னம்! | பள்ளி பருவத்தை நினைவுகூர்ந்த சாய் பல்லவி! | இயக்குனர் அவதாரம் எடுக்கும் லப்பர் பந்து நாயகி! | சாதி தொடர்பான படங்களை எடுப்பதில் உடன்பாடில்லை: கவுதம் மேனன் கருத்து |
சென்னை: தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 50 சதவீத இருக்கைகளுடன், தியேட்டர்கள் இயங்க அனுமதித்து, 2020 அக்டோபரில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதித்து, ஜன., 4ல் தலைமை செயலர் உத்தரவிட்டுள்ளார். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் அனுமதி என்ற நிலை தொடர வேண்டும். 100 சதவீத இருக்கைகளில் ரசிகர்களை அனுமதிக்க முடியாது. பள்ளிகள் திறக்காத நிலையில் ரசிகர்களை அனுமதித்தது எப்படி. கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மதுரை ஐகோர்ட் கிளையும் அறிவுரை
முன்னதாக, 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், வரும் 11ம் தேதி வரை தியேட்டர்களில் 50 சதவீத ரசிகர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி வழங்கியது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். 50 சதவீத ரசிகர்களை தமிழக அரசு, நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம். கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு நல்ல முடிவு எடுக்க வேண்டும். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், விரிவான அறிக்கை பெற்று தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.