பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! |
தெலுங்கு படத்தில் நடித்து பொறியாளன் படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் ஆனந்தி. பிரபுசாலமன் இயக்கிய கயல் படம் தோல்வி அடைந்தாலும் ஆனந்திக்கு அடையாளம் கொடுத்தது. அதன் பிறகு விசாரணை, பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு உள்பட பல படங்களில் நடித்தார். வளர்ந்த வரும் நிலையில் ஆனந்தி நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஆனந்தியின் சொந்த ஊரான தெலுங்கானா மாநிலம் வாரங்கல்லில் நடந்த இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். தயாரிப்பாளர்கள் ஜே.சதீஷ்குமார், அம்மா கிரியேஷன் சிவா உள்ளிட்ட ஒரு சிலர் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனந்தி திருமணம் செய்து கொண்டிருப்பது சாக்ரட்டீஸ் என்பவர். இவர் ஆனந்தியின் உறவினர் என்றும் பெற்றோர்கள் பார்த்து முடிவு செய்த திருமணம் என்றே கூறப்பட்டது. ஆனால் அது உண்மை அல்ல. இது காதல் திருமணம்.
சாக்ரட்டீஸ் இயக்குனர் நவீனின் மைத்துனர். நவீன் இயக்கிய அலாவுதீனின் அற்புத கேமரா படத்தில் சாக்ரட்டீஸ் இணை இயக்குனராக பணியாற்றினார். இந்தப் படத்தில் ஆனந்தி நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் உருவாகி உள்ளது. அதுதான் இப்போது திருமணத்தில் முடிந்துள்ளது. சாக்ரட்டீஸ் தற்போது நவீன் இயக்கும் அக்னி சிறகுகள் படத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார். அடுத்து ஒரு படத்தை தனியாக இயக்க இருக்கிறார். இதனை அம்மா கிரியேஷன் சிவா தயாரிக்கிறார்.