'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
2018ம் ஆண்டு வெளிவந்த 'கேஜிஎப்' படத்தின் இரண்டாம் பாகமான 'கேஜிஎப் சேப்டர் 2' டீசர் நேற்று இரவே யு டியூபில் வெளியிடப்பட்டது. இன்று காலையில் வெளியாவதாக இருந்த டீசர் நேற்று இரவில் சமூக வலைத்தளங்களில் 'லீக்' ஆனதால் இரவு 9.29 மணிக்கே டீசரை வெளியிட்டுவிட்டார்கள்.
வெளியான பத்து மணி நேரத்திற்குள்ளாக இரவு நேரத்திலும் இந்த டீசர் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இதற்கு முன்பு 'மாஸ்டர்' டீசர் 24 மணி நேரத்திற்குள்ளாக 1.85 மில்லியன் லைக்குகளைப் பெற்று சாதனை புரிந்தது. அந்த சாதனையை 10 மணி நேரம் 30 நிமிடங்களுக்குள்ளாகவே 'கேஜிஎப் 2' டீசர் முறியடித்துவிட்டது.
மேலும், 'மாஸ்டர்' டீசர் 78 நிமிடங்களில் 1 மில்லியன் லைக்குகள் பெற்ற சாதனையை 'கேஜிஎப் 2 டீசர்' 76 நிமிடங்களில் புரிந்திருக்கிறது.
ஒரு கன்னடப் படத்தின் டீசர் இந்த அளவிற்கு ஒரு சாதனையைப் புரிந்திருப்பது மிகப் பெரும் ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது. கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாக இருந்தாலும் டீசரை ஆங்கிலத்தில் வெளியிட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது வரை 20 மில்லியன் பார்வைகளை இந்த டீசர் கடந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கிறார்கள். தென்னிந்திய அளவில் இந்த டீசர் மேலும் சில சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, ஐந்து மொழிகளுக்கும் சேர்த்து தான் 'கேஜிஎப் 2' டீசர் இந்த சாதனையைப் புரிகிறது. ஆனால், 'மாஸ்டர்' டீசர் தமிழில் மட்டுமே அந்த சாதனையைப் புரிந்தது என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சண்டையிட ஆரம்பித்துவிட்டார்கள்.