பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

தமிழ் மற்றும் மலையாளதத்தில் உருவாகியுள்ள படம் யூகி. கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி,பவித்ரா லக்ஷ்மி நடித்திருக்கிறார்கள். வருகிற 18ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ரெஞ்சின் ராஜ் இசை அமைத்துள்ளார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் ஆனந்தி பேசியதாவது: கயல் படம் வந்து 8 வருடம் ஆகிறது. நீங்கள் காட்டி வரும் அன்புக்கு நன்றி. யூகி படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். இதில் நடிக்கும்போது போது நான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்தேன். மிக மிக சுவாரஸ்யமான கதை. மிக அட்டகாசமாக எடுத்துள்ளார்கள். மிக திறமையான நடிகர்களுடன் இணைந்து நடித்தது மகிழ்ச்சி.
மேலும் அவர் கூறும்போது "இந்த படத்தில் நடிக்க வந்த பிறகுதான் இது மலையாளத்திலும் தயாராவது தெரிய வந்தது. மகிழ்ச்சி அடைந்தேன். இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறேன். மலையாளத்தில் வேறு நடிகை நடிப்பதாக இருந்தது. ஆனால் எனது நடிப்பை பார்த்துவிட்டு என்னையே மலையாளத்திலும் நடிக்க சொல்லிவிட்டார்கள். திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை நன்றாக போய்கொண்டிருக்கிறது. சிறிய இடைவெளிக்கு பிறகு நடிப்பிலும் பிசியாகி விட்டேன்" என்றார்.