'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை பானுஸ்ரீ. ஆவு புலி மத்யாலா பிரபாஸ் பெல்லி, யேது செப்பல கதா, நல்லமலே படங்களில் நடித்தார். தற்போது பிரேக்கிங் நியூஸ் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இதில் அவர் ஜெய் ஜோடியாக நடிக்கிறார்.
ராகுல் பிலிம்ஸ் புரொடக்ஷன் சார்பாக திருக்கடல் உதயம் படத்தைத் தயாரிக்க, ஆண்ட்ரூ பாண்டியன் இயக்குகிறார். ஜானிலால், செவிலோ ராஜா ஒளிப்பதிவு செய்கிறார்கள். பாடல்களுக்கு விஷால் பீட்டர் இசை அமைக்கிறார். எல்.வி.முத்து கணேஷ் பின்னணி இசை அமைக்கிறார்.
சயின்ஸ் பிக்ஷன் ஆக்ஷன் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இந்தப் படத்தில் ஜெய் சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். ராகுல் தேவ், தேவ் கில் வில்லன்களாகவும், சிநேகன் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். மேலும், இந்திரஜா, ஜெய் பிரகாஷ், சந்தானபாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது.