ஆஸ்கர் விருதுக்கு சென்ற படத்திற்கு இந்தியாவில் தடை | சிவாஜியின் அன்னை இல்லம் எனக்கே சொந்தம்: நீதிமன்றத்தில் பிரபு மனு | பிளாஷ்பேக்: பாகவதர் நடிக்காததால் தோல்வி அடைந்த படம் | ஹார்டிஸ்க் ஒப்படைப்பு: தீர்ந்தது சோனா பிரச்னை | ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் |
பார்த்திபனுக்கு இது போதாத காலம் போலியிருக்கிறது. அவர் இயக்கிய இரவின் நிழல் படம் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகிறது. இந்த படத்தை முதல் சிங்கிள் ஷாட் நான் லீயர் படம் என்று அறிவித்தார். அவரின் புதிய முயற்சிக்கு பாராட்டுகள் குவிந்தது. ஆனால் இது முதல் படம் அல்ல இரண்டாவது படம்தான் என்று படம் வெளிவந்த பிறகு பலரும் விமர்சித்தார்கள். அதற்கு பார்த்திபன் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
தற்போது இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் இந்த படம் உலகின் இரண்டாவது சிங்கிள் ஷாட் ஆன் லீயர் படம் என்று குறிப்புடன் வெளியிட்டது ஓடிடி தளம். இது பார்த்திபனை மேலும் சங்கடப்படுத்தியது.
இது தொடர்பாக பார்த்திபன் கூறியிருப்பதாவது: படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது. ஆனால், எனக்கு எதுவுமே அவ்வளவு சுலபமாக நடப்பதில்லை. அமேசானில் படம் வெளிவரும்போது யாருக்குமே தெரியவில்லை. எந்த ப்ரமோஷனும் இல்லை. திடீரென்று ஒரு நாள் வெளியாகியது. எந்த விளம்பரமும் இல்லை. மேலும் அதிலிருந்த கமெண்ட்ஸ் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. அது மாறுவதற்கு 20 மணிநேரம் தேவைப்பட்டது. தற்போது இருக்கும் கமெண்ட்ஸூம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதுவும் கூட எனக்கு உடன்பாடில்லை. அதை மாற்ற முடியுமா என தெரியவில்லை.
பாலில் சொட்டு விஷம் போல, எதிர்மறையான விமர்சனங்கள் சீர்குலைத்து விடுகின்றன. அதை தவிர்க்க முடியாது. உலகம் முழுவதும் படம் தெரியவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. விரைவில் இந்த படம் உலகம் முழுவதும் தெரியும். இது சிங்கிள் ஷாட்டா, நான் லீனியரா என்பதெல்லாம் இரண்டாவதுதான். கன்டென்ட் உங்களை ஈர்க்க வேண்டும். இது சிங்கிள் ஷாட்; நான் லீனியர் என்பதற்கான ஆதாரங்கள் என்னிடம் உண்டு.
பல நேரங்களில் இது யோக்கியமானதுதான் என்பதை நிரூபிப்பது கொடுமையான விஷயம். எனக்கு இந்த சினிமாவைத்தவிர எதன் மேலும் ஈடுபாடில்லை. நான் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அடுத்து ஜனரஞ்சகமான ஒரு சினிமாவை குடும்பம் குடும்பமாக வந்து பார்க்கும் படத்தை எடுக்க இருக்கிறேன். இரவின் நிழல் படத்தின் மேக்கிங் வீடியோ விரைவில் வெளியாகும். இது சிரமமான ஒரு மேக்கிங். குற்றம் செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதை அழுத்தமாக சொல்லியிருக்கிறோம்.
இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.