பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

தனியிசை ஆல்பங்கள் மூலம் புகழ்பெற்ற ஹிப் ஹாப் தமிழா ஆதி சினிமாவில் இசை அமைப்பாளர் ஆனார். அதன்பிறகு மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகர் மற்றும் இயக்குனர் ஆனார். இந்த படம் வெற்றி பெற்றது. ஆனால் இதற்கு பிறகு அவர் நடித்த நட்பே துணை, நான் சிரித்தால் தீபாவளி, சிவகுமாரின் சபதம், அன்பறிவு படங்கள் வெற்றி பெறவில்லை. தற்போது வீரன் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் ஆதியின் அடுத்த படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படத்தை இயக்கிய கார்த்திக் வேணுகோபாலன் இயக்குகிறார். எல்கேஜி, கோமாளி, மூக்குத்தி அம்மன், வெந்து தணிந்தது காடு படங்களை தயாரித்த வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கிறார். ஆதியே இசையும் அமைக்கிறார்.
படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இப்படத்தில் பணியாற்றும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




