தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நடிகர் விஜய் சேதுபதி தயாரித்து நடித்துள்ள படம் முகிழ். ரெஜினா கசான்ட்ரா ஜோடியாக நடித்துள்ளார். விஜய்சேதுபதியின் மகள் ஸ்ரீஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கார்த்திக் எழுதி இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலருக்கு வரவேற்பு கிடைத்தது. இப்படம் நேரடியாக ஓ.டி.டி-யில் வெளியாககிறது.
இதுகுறித்து கார்த்திக் பேசும்போது, "ரொம்ப லைவ்- ஆன படம் இது. விஜய்சேதுபதி டிரைலரைப் பார்த்துவிட்டு தன் சொந்த வாழ்வோடு கனெக்ட் செய்யும் விதமாக இருப்பதாக சிலாகித்தார். இந்த டிரைலர் என்னை நிறைய பேசவைத்துள்ளது, எல்லாம் இந்தப்படம் செய்த வேலை என்றார். மேலும் "ஒரு பேமிலிமேனாக எனக்கு நிறைவா இருக்கு" என்றார். அவரது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் 100% சதவிகிதம் தகுதியான படமாக ரசிகர்களின் பார்வைக்கும் இப்படம் இருக்கும்.
ரெஜினா கசான்ட்ரா இப்படத்தில் அவரே டப்பிங் பேசியுள்ளார். டப்பிங் பேசுவதற்காக அவர் மிகவும் மெனக்கெட்டுள்ளார், முதல் முறையாக தமிழில் டப்பிங் பேசியுள்ளதால் மிகவும் சிரத்தை எடுத்து அழகாகப் பேசியுள்ளார். ஒரு பெற்றோர் ஒரு குழந்தையை எப்படி வளர்க்கிறார்கள், அந்தக் குழந்தையாலும் அந்தக்குழந்தைக்கும் ஒரு பிரச்சனை வரும்போது பெற்றோர் அதை எப்படி கையாள்கிறார்கள் என்பதே கதை. ரேவா என்ற பெண் இசை அமைப்பாளர் தமிழில் அறிமுகம் ஆகிறார். இவர் மராட்டியிலும் மலையாளத்திலும் இசை அமைத்துள்ளார். விரைவில் ஓடிடி-யில் வெளியாகிறது என்றார்.