சின்மயி மன்னிப்பு : இயக்குனர் பேரரசு பதிலடி | கைவசம் 3 படங்கள் : தமிழில் கால் பதிக்க நினைக்கிறார் கிர்த்தி ஷெட்டி | கிண்டல், கேலி, நெகட்டிவ் எண்ணம் : சமூக வலைதளங்களை தவிர்க்கும் திரைபிரபலங்கள் | நல்ல படம் பண்ணிட்டு ரிட்டையர்டு : கமல்ஹாசன் | விஜய் பட இயக்குனர் உடன் இணையும் சல்மான் | பாண்டிராஜ் படத்தில் ஜெயராம், ஊர்வசி | உறவு பிரியாமல் இருக்க 'பூதசுத்தி விவாஹம்' செய்த சமந்தா | ரஜினி பிறந்தநாளில் ‛எஜமான்' ரீ ரிலீஸ் | மூளை குறைவாக இருப்பதால்தான் நடிகராக இருக்கிறேன்: சிவகார்த்திகேயன் | பிரபல பாலிவுட் இயக்குனரின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் தமன்னா |

மும்பை : ஐ.நா., சபையின், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு அமைப்பின் பிரதிநிதியாக, உலக அழகி பட்டம் பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த, நடிகை மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரஞ்ச் தி வோர்ல்டு என்ற, சர்வதேச அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதியாக, 2017ல் உலக அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, மனுஷி கூறியதாவது: உலகம் முழுதும், அனைத்து வயது பெண்களும் பல்வேறு வடிவங்களில் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஒரு பெண்ணாக, என்னால் அந்த வேதனையை உணர முடிகிறது. கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான உலகை கட்டி எழுப்பும் முயற்சிகளில், நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். இதற்கு பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்றார்.
மனுஷி, பிரித்விராஜ் என்ற ஹிந்தி படத்தில், அக் ஷய் குமாருடன் நடித்து வருகிறார்.