ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் | தளபதி திருவிழா : விஜய்க்காக களமிறங்கும் பிரபல பாடகர்கள் | 100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் |

மத்திய அரசு ஆண்டுதோறும் சிறந்த சினிமா கலைஞருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கி வருகிறது. இது இந்திய சினிமாவில் மிக உயரிய விருதாக பார்க்கப்படுகிறது. இதேப்பெயரில் அரசு சார்பில்லா ஒரு தன்னார்வ அமைப்பு தாதா சாகேப் பால்கே சர்வதேச விருது வழங்கும் விழாவை நடத்தி வருகிறது. இந்த அமைப்பு தற்போது தென்னிந்திய கலைஞர்களுக்கும் விருது வழங்கி கவுரவிக்க இருக்கிறது. தென்னிந்திய கலைஞர்களுக்கான விருது பட்டியலை நேற்று வெளியிட்டது. அது வருமாறு:
தமிழ்
தமிழில் சிறந்த படமாக ஒளிப்பதிவாளர் செழியன் இயக்கிய டூ லெட் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்த தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றலுக்காக அஜித்துக்கு சிறப்பு விருது வழங்கப்படுகிறது. ராட்சசி படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார். சிறந்த இயக்குனருக்கான விருதை ஒத்தச் செருப்பு படத்தை இயக்கிய பார்த்திபனுக்கும் சிறந்த இசையமைப்பாளருக்கான விருது அனிருத்துக்கும் வழங்கப்படுகிறது.
மலையாளம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது- : மோகன்லால்
சிறந்த நடிகர்: சூரஜ் வெஞ்சராமுடு (அண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்சன் 5.25)
சிறந்த நடிகை: பார்வதி திருவொத்து (உயாரே)
சிறந்த இயக்குனர்: மது சி நாராயணன் (கும்பலங்கி நைட்ஸ்)
சிறந்த படம்: உயாரே
சிறந்த இசை இயக்குனர்: தீபக் தேவ்
தெலுங்கு
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது : நாகார்ஜுனா
சிறந்த நடிகர்: நவீன் பாலிஷெட்டி (முகவர் சாய் சீனிவாச ஆத்ரேயா)
சிறந்த நடிகை: ரஷ்மிகா மந்தண்ணா (அன்புள்ள தோழர்)
சிறந்த இயக்குனர்: சுஜீத் (சாஹோ)
சிறந்த படம்:ஜெர்சி
சிறந்த இசை இயக்குனர்: எஸ் தமன்
கன்னடம்
பன்முகத்தன்மை வாய்ந்த நடிப்பாற்றல் விருது : சிவ்ராஜ்குமார்
சிறந்த நடிகர்: ரக்ஷித் ஷெட்டி (அவனே ஸ்ரீநாம்நாராயணா)
சிறந்த நடிகை: தான்யா ஹோப் (யஜமனா)
சிறந்த இயக்குனர்: ரமேஷ் இந்திரா (பிரீமியர் பத்மினி)
சிறந்த படம்:முகாஜ்ஜியா கனசுகலு
சிறந்த இசை இயக்குனர்: வி ஹரிகிருஷ்