இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
பிரபல ஆடை வடிவமைப்பாளர் சாய், மாயத்திரை என்ற படத்தை தயாரித்துள்ளார். இதில் அசோக், சாந்தினி, ஷீலா ராஜகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். சம்பத்குமார் இயக்கி உள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகை குஷ்பு கலந்து கொண்டு பேசியதாவது:
இங்கு நான் சினிமா பற்றி மட்டும் தான் பேசுவேன். அரசியல் பேச மாட்டேன். எனக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய சாய் படம் தயாரிக்க போகிறேன் என்றதும் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் கவனமாக செய்யுங்கள் என்றேன். இப்போது நஷ்டம் இல்லை என்றார்.
சினிமாவை தவறான கண்ணோட்டத்தில் வெளியே பார்க்கின்றனர். ஆனால் என்னுடன் பணியாற்றிய ஆண்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் என்னை பாதுகாப்பாக பார்த்துக் கொண்டனர். டான்சர், லைட்மேன் மூலம் தான் தமிழ் கற்றுக்கொண்டேன்.
டாஸ்மாக்கை 100 சதவீதம் திறந்து இருப்பது போல் சினிமா தியேட்டர்கள் 100 சதவீத பார்வையாளர்களோடு இயங்க அனுமதி வழங்க வேண்டும் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் திரைத்துறை நன்றாக வளரவும், நிம்மதியாக இருக்கவும் வாய்ப்பு அமையும். கொரோன தடுப்புக்கான அத்தனை விதிமுறைகளையும் திரைத்துறையினர் கடைபிடிப்பார்கள்.
தயாரிப்பாளர் சங்கத்தினர் சினிமா துறையில் பிரச்சினைகள் வரும்போது சிறிய பட தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அந்த பிரச்சினைகளை உடனே தீர்க்க வேண்டும்.
இவ்வாறு குஷ்பு பேசினார்.