மதுரை, கல்லம்பட்டி-யில் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு | 'ஸ்டார்' படத்திற்கு எதிர்பாராத வியாபாரம்? | சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் |
3 படத்தில் நடித்த தனுஷ் அடுத்து தனது சொந்த பட நிறுவனமான ஒன்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஒரு படத்தை தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, எதிர்நீச்சல் என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில், தனுஷ் நடிக்கவில்லை. கதாநாயகனாக சிவகார்த்திக்கேயன் நடிக்கிறார். 180, இங்லீஷ் விங்லீஷ் படத்தில் நடித்த பிரியா ஆனந்த் கதாநாயகியாகவும், அட்டகத்தி நாயகி நந்திதா இன்னொரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.
டைரக்டர்கள் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக
பணிபுரிந்த ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இந்த படத்தின் கதை-திரைக்கதை-வசனம்
எழுதி இயக்குகிறார். ஆடுகளம், எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஆர்.வேல்ராஜ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்துக்காக தனுஷ் 2 பாடல்களை எழுதியிருக்கிறார். மற்ற பாடல்களை தாமரை, கார்க்கி ஆகிய இருவரும் எழுத, ஒய் திஸ் கொல வெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார்.