மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
நான் இதுவரை ஜோடி சேர்ந்து நடித்த நடிகர்களில் ஆர்யா ஜாலியான நடிகர் என்கிறார் அனுஷ்கா. இரண்டாம் உலகம் படப்பிடிப்புக்காக ஜார்ஜியா காட்டுக்குள் சென்றபோது வரை அவருக்கும், எனக்குமிடையே பெரிய புரிதல் எதுவும் இல்லை. ஆனால் இரண்டு நாட்கள் மெளனமாக இருந்தவர், பின்னர் மதிய இடைவேளை நேரங்களில் ரொம்ப காமெடியாக பேசத் தொடங்கி விட்டார்.
அவர் பேசும் காமெடிகளால் பல சமயங்களில் என் வயிறு வலித்திருக்கிறது. அந்த அளவுக்கு ஜாலியாக பேசிக்கொண்டேயிருப்பார். அதனால் ஜார்ஜியா காட்டுக்குள் இருந்த நாட்களில் அழகாக பொழுது போயின. ஆர்யா மட்டும் இல்லையென்றால் வெறுத்துப்போயிருப்பேன் என்கிறார் அனுஷ்கா.