மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
"அன்னமயா, ஸ்ரீ ராமதாசு போன்ற ஆன்மீக படங்களின், கலக்கலான வெற்றிக்கு பின்,தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனா, மீண்டும் ஒரு ஆன்மிக படத்தில் நடித்துள்ளார். ஷிரிடி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் "ஷிரிடிசாய் என்ற, அந்த படம், நாடு முழுவதும்வெளியாகி, வசூலை குவித்து வருகிறது. ராகவேந்திர ராவ் இயக்கியுள்ள, இந்த படத்தில், கமாலினி முகர்ஜி, ஸ்ரீகாந்த், ஸ்ரீஹரி போன்றோர் நடித்துள்ளனர். நாகார்ஜுனா கூறுகையில்,"ஆன்மிக படங்களில் நடித்து முடித்ததும், எனக்குள், புத்துணர்ச்சி பிறந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மற்றொரு சந்தோஷமான விஷயமும் உண்டு. இதுவரை எந்ததெலுங்கு படமும் ரிலீசாகாத, ஆப்பிரிக்க நாடுகளிலும், இந்த படம் ரிலீசாகியுள்ளது.ஆப்பிரிக்காவில், ஷிரிடி சாய்பாபாவுக்கு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் உண்டு.அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க,இந்த படம், அங்கு வெளியிடப்பட்டுள்ளது. இதை நினைத்தால், மிகவும் சந்தோஷமாக உள்ளதுஎன்றார்.