மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
ஹாலிவுட்டில் ஒரு படம் "ஹிட்டானால், அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பாகங்கள்,தயாராகும். அந்த வகையில், உலக சினிமாவையே கலக்கிய "ரெசிடெண்ட் ஈவில் படத்தின், ஐந்தாம் பாகம் தற்போது தயாராகியுள்ளது. அறிவியல் தொழில் நுட்பமும்,அதிரடி ஆக்ஷனும் கலந்த, இந்த படத்தில், மில்லா ஜாவோவிச், ஜோஹன் அரீப், ஜான் ராபர்ட்ஸ், கெவின் டுராண்ட் ஆகியோர் நடித்துள்ளனர். டான்மேடி இசையமைக்க,பால்.டபிள்யூ. எஸ்.ஆண்டர்சன் இயக்கியுள்ளார். அம்பரல்லா கார்ப்பரேஷன் என்ற அமைப்பு, பல மர்மங்கள் நிறைந்தது. இந்த மர்ம முடிச்சுகளை அவிழ்க்க முயலுகிறாள் ஆலீஸ். அப்போது, அவளைப் பற்றிய மர்மமான தகவல்களும் வெளியாகின்றன. அம்ப்ரல்லா கார்ப்பரேஷனுக்கும், ஆலிசுக்கும் என்ன தொடர்பு என்பதை, திகிலோடு சொல்கிறது, இந்த படம். "3டி தொழில் நுட்பத்தில் தயாராகியுள்ள இந்த ஹாலிவுட்படம், இந்தி, தமிழ், தெலுங்கு, போன்ற இந்திய மொழிகளிலும் வெளியாகவுள்ளது.