மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குனர் மிஸ்கின், தான் இயக்கும் படங்களில் இடம் பெறும் குத்துப்பாட்டில் மஞ்சள் சேலையில் நடனமாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வாறு இடம் பெற்ற சித்திரம் பேசுதடி படத்தில் வாலமீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...., அஞ்சாதே படத்தில் கத்தால கண்ணால.. போன்ற பாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
அந்த வகையில் அவர் தற்போது இயக்கி வரும் முகமூடி படத்திலும், அதுமாதிரியான பாடல் இடம்பெறுமா? என்ற கேள்விக்கு மிஸ்கின் பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில், முகமூடி ஒரு சூப்பர் ஹீரோ படமாகும். அதில் குத்துப் பாடலில் மஞ்சள் சேலையில் ஆடுவது கதைக்கு பொருந்தாது. இருந்தாலும் படத்தில் டாஸ்மாக் கடையில் வைத்து பிரம்மாண்டமான முறையில் ஒரு பாடலை எடுத்து இருக்கிறோம். இந்த பாடல், என்னுடைய பழைய படங்களில் உள்ள குத்துப் பாடல்கள் இல்லாத ஏக்கத்தை தீர்த்துவிடும், என்றார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஜூலை 20ம் தேதி நடைபெற உள்ளது.