விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
விஷால் நடிக்க இருக்கும் மத கஜா ராஜா (எம்.ஜி.ஆர்.,) படத்தில் ஒரு முக்கிய ரோலில் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷூம் ஒரு முக்கிய ரோலில் நடிக்க இருக்கிறார். கிரிக்கெட் வீரராக தனது வாழ்க்கையை தொடங்கி, முதல்தர மற்றும் சர்வதேச போட்டிகளில் விளையாடி அசத்தியவர் சடகோபன் ரமேஷ். பின்னர் சந்தோஷ் சுப்ரமணியன் படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக ஒரு சிறிய ரோலில் நடித்து பெயர் பெற்று, பின்னர் போட்டா போட்டி படத்தில் ஹீரோவாக களம் இறங்கி அசத்தினார்.
இந்நிலையில் கலகலப்பு படத்திற்கு பிறகு சுந்தர்.சி அடுத்து விஷாலை வைத்து இயக்க இருக்கும் மத கஜா ராஜா (எம்.ஜி.ஆர்.,) படத்தில் ஒரு முக்கிய ரோலில் சடகோபன் ரமேஷையும் நடிக்க வைக்க எண்ணியுள்ளார். போட்டா போட்டியில் ரமேஷின் நடிப்பை பார்த்து சுந்தர்.சிக்கு ரொம்ப பிடித்து போய்விட்டதால், இப்படத்தில் ஒரு வெயிட்டான ரோலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்க உள்ளார். மேலும் அவருக்கு ஜோடியாக வழக்கு எண் 18/9 படத்தில் ரித்திகா ஸ்ரீனிவாஸ் நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது.
விஷால் முதன்முறையாக மூன்று வேடங்களில் தோன்றவுள்ள இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் துவங்க இருக்கிறது.