மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
இயக்குநர் கே.பாக்யராஜின் பாக்யராஜின் சித்து பிளஸ் 2 வில் அறிமுகமானவர் சாந்தினி. முதல் படம் வெற்றி பெறாவிட்டாலும், இவரது நடிப்பு பாராட்டும் படி இருந்தது. இருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இன்றி இருந்து வந்தார். இதற்கிடையே ஏகப்பட்ட விளம்பர படத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டார் சாந்தினி. குறிப்பாக போத்தீஸ் விளம்பரம், சிங்கப்பூர்,துபாய் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் விளம்பர மாடலிங் செய்து வருகிறார்.
விளம்பர மாடல்களை பார்த்து அவருக்கு 3 பட வாய்ப்புகள் வந்துள்ளது. தமிழில் இயக்குனர் ப்ருத்வி இயக்கத்தில் உருவாகும் நான் ராஜாவாக போகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். படத்தின் நாயகனாக நகுல் நடிக்கவுள்ளார். இது தவிர இரண்டு தெலுங்குப் பட வாய்ப்பும் சாந்தனிக்கு வந்து உள்ளது.
இது குறித்து சாந்தினி கூறுகையில், நான் ராஜாவாகப் போகிறேன் வித்தியாசமான ஆக்ஷன் படம். இதில் நான் சட்டக் கல்லூரி மாணவியாக நடிக்கிறேன். திருநெல்வேலி ஸ்லாங் பேசும் என் கேரக்டர். புதுசாக இருக்கும், என்கிறார். மேலும் படங்களின் எண்ணிக்கை முக்கியமல்ல தரமான கதையும் பாத்திரமும் இருந்தால்தான் படங்களைத் தேர்வு செய்வதாகக் கூறும் சாந்தினிக்குப் பிடித்த நடிகர் ரஜினியாம், நடிகைகளில் ஸ்ரீதேவி மற்றும் ஜோதிகாவாம். நடிப்புக்கு ஸ்ரீதேவி, ஜோதிகா என்றால் ஸ்டைலுக்கு ரஜினியாம்.