மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழ் சினிமாவில் இந்த 2018ம் ஆண்டில், விஜய் சேதுபதி, த்ரிஷா நடித்த '96' பலரையும் கவர்ந்த ஒரு படமாக இருந்தது. மிகப் பெரிய வரவேற்பையும், வசூலையும் இந்தப் படம் குவித்தது. படம் வெளியாவதற்கு முன்பே இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெறும் என்று கணித்து பிரபல தெலுங்குப் படத் தயாரிப்பாளரான தில் ராஜு, தெலுங்கு ரீமேக் உரிமையை நல்ல விலை கொடுத்து வாங்கினார்.
தெலுங்கில் விரைவில் ரீமேக் ஆக உள்ள இந்தப் படத்தில் தமிழில் விஜய் சேதுபதி நடித்த கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடிக்க உள்ளார். த்ரிஷா நடித்த கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்பதில் த்ரிஷாவுக்கும், சமந்தாவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.
தமிழில் படத்தை இயக்கிய பிரேம்குமார் தான் தெலுங்கிலும் படத்தை இயக்கப் போகிறார். அவர் தெலுங்கிலும் த்ரிஷாவை நடிக்க வைக்கும் முடிவில் தான் இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளர் ராஜு, சமந்தாவை நடிக்க வைக்கும் முடிவில் இருக்கிறார். த்ரிஷா, ஒரு காலத்தில் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்தார். ஆனால், இப்போது சமந்தா தான் தெலுங்கில் முன்னணி நாயகி. எனவே, சமந்தா நடித்தால் வியாபார ரீதியாக பிரச்சினை இல்லை என தயாரிப்பாளர் நினைக்கிறாராம்.
இந்த விவகாரத்தில் தயாரிப்பாளர் வெற்றி பெறப் போகிறரா அல்லது இயக்குனர் வெற்றி பெறப் போகிறாரா என்பது விரைவில் தெரியும்.