ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
16வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த 13ம் தேதி சென்னையில் தொடங்கியது. தமிழக அரசின் ஆதரவுடன் இண்டோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 8 நாட்கள் நடந்த இந்த திரைப்பட விழாவில் 50க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்த 150க்கும் அதிகமான திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
சிறந்த தமிழ்ப் படங்கள் வரிசையில் 96, அபியும் அனுவும், அண்ணனுக்கு ஜே, ஜீனியஸ், இரவுக்கு ஆயிரம் கண்கள், இரும்புத்திரை, கடைக்குட்டி சிங்கம், மெர்குரி, பரியேறும் பெருமாள், ராட்சசன், வடசென்னை, வேலைக்காரன் ஆகிய 12 படங்கள் திரையிடப்பட்டன. சிறப்புத் திரையிடலாக 'மேற்கு தொடர்ச்சி மலை' திரையிடப்பட்டது.
இதில் பரியேறும் பெருமாள், 96 ஆகியவை சிறந்த படங்களாகத் தேர்வு செய்யப்பட்டன. 'பரியேறும் பெருமாள்' படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்துக்கு ரூ.1 லட்சமும், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ரூ.2 லட்சமும் பரிசு அளிக்கப்பட்டது.
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளியான '96' படம் இரண்டாவது சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. அப்படத்தின் இயக்குநர் பிரேம் குமாருக்கும், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கும் தலா ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்பட்டது.