மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
2011ம் ஆண்டு வெளிவந்த 'ஒய் திஸ் கொலவெறிடி' பாடல் மூலம் நடிகர் தனுஷும், அறிமுக இசையமைப்பாளர் அனிருத்தும் யு டியூப் என்ற வீடியோ இணையதளத்தை பரபரப்பாக்கினார்கள். அதன் பிறகுதான் தமிழ் திரையுலகத்தில் யு டியூப் இணையதளத்தின் பயன்பாடு அதிகரித்தது. தனுஷ், அனிருத் கூட்டணி பல சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக அந்தக் கூட்டணி பிரிந்தே இருந்தது.
'பேட்ட' படத்தில் அனிருத் இசையில் 'இளமை திரும்புதே' என்ற பாடலை தனுஷ் எழுதியிருப்பது தெரிய வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. 'பேட்ட' இசை விழாவில் தனுஷும் வந்து கலந்து கொள்வார் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தனுஷ் விழாவில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த சில நாட்களாகவே தனுஷ் நடித்து வெளிவர உள்ள 'மாரி 2' பாடலும், அனிருத் இசையமைத்துள்ள 'பேட்ட' பாடலும் யு டியூபில் ஒன்றுக்கொன்று போட்டி போட்டு வருகின்றன. இதனிடையே, பிரிந்த தனுஷ், அனிருத் கூட்டணி 'பேட்ட' படத்தில் இணைந்தது தற்காலிகமா, நிரந்தரமா என்ற ஒரு கேள்வி எழுந்தது. அது நிரந்தரம் தான் என அனிருத் புரிய வைத்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் 2019ம் ஆண்டு தனுஷ் நடிக்க உள்ள ஒரு படத்திற்கு இசையமைக்கப் போவதாக அறிவித்துள்ளார். ரசிகர்களால் 'டிஎன்எ' என அழைக்கப்படும் இந்த கூட்டணி எந்தப் படத்தில் இணையும் என்பதற்கு ரசிகர்கள் கொஞ்சம் பொறுத்திருக்க வேண்டும்