அனுஷ்காவின் ‛காட்டி' படம் மீண்டும் தள்ளிப் போகிறதா? | சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னையா...? : இவானா அளித்த பதில் | திருவண்ணாமலையில் கண்ணீருடன் தரிசனம் செய்த அம்பிகா | சூர்யா சேதுபதி : தமிழ் சினிமாவில் அடுத்த வாரிசு நடிகர், வரவேற்பு பெறுவாரா ? | அல்லு அர்ஜுன் - பிரசாந்த் நீல் கூட்டணியில் 'ராவணம்' | ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? |
தெலுங்கில் வெளிவந்து ஹிட்டான டெம்பர் படத்தை, தமிழில் அயோக்யா என்ற பெயரில் ரீமேக் செய்து நடித்து வருகிறார் விஷால். இதில் அவருடன் ராசி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், பூஜா உள்பட பலர் நடிக்கிறார்கள். வெங்கட் மோகன் என்ற புதுமுகம் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இதன் படப்பிடிப்பு விழுப்புரத்தை சுற்றியுள்ள கிராமங்களில் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே உள்ள கூனிமேடு என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் விஷால் படப்பிடிப்பு நடக்க இருந்தது. இதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மற்றும் போலீசிடம் அனுமதி பெறப்பட்டிருந்தது.
நேற்று காலை படப்பிடிப்பு குழுவினர் அந்த வீட்டுக்கு சென்றது. அங்கு வந்த அரசு அதிகாரிகள், "இங்கு படப்பிடிப்பு நடத்தக்கூடாது அருகில் மசூதி உள்ளதால் அவர்கள் படப்பிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்" என்று கூறியுள்ளனர். படப்பிடிப்பு குழுவினர் அனுமதி கடிதத்தை காட்டியும் அவர்கள் சம்மதிக்கவில்லை. இதனால் படப்பிடிப்பு நடத்தாமல் படக்குழுவினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
"அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்புக்கு சென்றோம். ஆனாலும் ஏதோ உள்நோக்கம் காரணமாக அனுமதி மறுத்து விட்டார்கள். இதற்கு அரசியல் காரணம் இருக்கும் என்றும் சந்தேகிக்கிறோம். ஒரு நாள் படப்பிடிப்பு தடையால் தயாரிப்பாளருக்கு 12 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று தயாரிப்பு நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.