ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கேரளாவில் ஆண்டு தோறும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 23வது சர்வதேச திரைப்பட விழா இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. வருகிற 13ந் தேதி வரை 7 நாட்கள் நடக்கிறது. இதில் 120 நாடுகளைச் சேர்ந்த சுமார் 140 படங்கள் திரையிடப்படுகிறது.
சர்வதேச திரைப்பட விழாவில் தினமும் நடக்கும் விவாத அரங்கில் இயக்குனர்கள் சுவாதி சிந்து மோகன், சுதா, மீனா பிள்ளை, புத்ததேவ தஷ்குப்தா, கமல், மஜித் மஜிதி (ஈரான்), பினா பவுல், உமேஷ் குல்கர்னி, வெங்கடேஸ்வரன், வெற்றிமாறன், ஷாஜி, நடிகையும், இயக்குனருமான நந்திதாதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடுகிறார்கள். இறுதி நாளில் சிறந்த படங்களுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் விருது வழங்குகிறார்.
இந்த விழாவில் வஸந்த் இயக்கி உள்ள, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் என்ற தமிழ் படம் திரையிடப்படுகிறது. பார்வதி, லட்சுமி பிரியா சந்திரமவுலி, காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாரிமுத்து உள்பட பலர் நடித்துள்ளனர். என்.கே. ஏகாம்பரம் மற்றும் ரவிசங்கரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன் மற்றும் ஜெயமோகன் ஆகியோரின் சிறுகதைகளை கொண்டு இந்தப் படம் தயாராகி உள்ளது. சமீபத்தில் நடந்த மும்பை திரைப்பட விழாவில் பலரின் கவனத்தை ஈர்த்த படம் இது.