'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தமிழ்த் திரையுலகத்தில், ஏன் இந்தியத் திரையுலகத்திலேயே ஒரு மோஷன் போஸ்டருக்கு இந்த அளவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது ஆச்சரியம்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அஜித், நயன்தாரா நடிக்கும் 'விஸ்வாசம்' படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது.
இந்த ஒரு வாரத்திற்குள்ளாகவே இந்த மோஷன் போஸ்டர், 80 லட்சம் பார்வைகளையும், 5 லட்சம் லைக்குகளையும் கடந்துள்ளது. பொதுவாக இப்படிப்பட்ட பார்வைகளும், லைக்குகளும் டீசர், டிரைலர் ஆகியவற்றிற்குத்தான் கிடைக்கும். ஆனால், மோஷன் போஸ்டருக்கே அதிரடியை ஏற்படுத்திவிட்டனர் அஜித் ரசிகர்கள்.
மோஷன் போஸ்டருக்கே இப்படி என்றால் 'விஸ்வாசம்' படத்தின் டீசர், டிரைலர் வந்தால் என்ன நடக்கும் என மற்ற நடிகர்களின் ரசிகர்கள் அதிர்ச்சியுடனே காத்திருக்கிறார்கள்.