பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
100 டிகிரி, சகாக்கள், குறும்புக்கார பசங்க, உயிருக்கு உயிராக, 6 அத்தியாயம் உள்பட பல படங்களில் நடித்தவர் சஞ்சீவ். தற்போது ராஜா ராணி தொடரில் நடித்து வருகிறார். இந்த தொடரில் அவருக்கு ஜோடியாக நடிப்பவர் ஆலியா மானசா. இவர் ஜூலியும் 4 பேரும் உள்பட சில படங்களில் நடித்தவர்.
ராஜா ராணி தொடரில் கணவன், மனைவியாக நடித்து வரும் சஞ்சீவும், ஆலியா மானசாவும் நிஜத்திலும் காதலித்து வருவதாக சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இருவரும் படப்பிடிப்புக்கு ஒரே காரில் வருவதும், செல்வதுமாக இருக்கிறார்களாம்.
அதோடு ஆலியா மானசா தனது முகநூல் மற்றும் டுவிட்டரில் சஞ்சையுடன் நெருக்கமாக இருக்கும் படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ஐ லவ் பப்புகுட்டி என்று ஸ்டேட்டசும் போட்டிருக்கிறார். இதனால் இருவரும் காதலிப்பது உண்மைதான் என்றும், தொடர் முடிந்ததும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.