ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ |
இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம் 2.0. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய், எமி முதன்மை ரோலில் நடிக்க, ரஹ்மான் இசையமைக்க, நவம்பர் 29-ந்தேதி உலகமெங்கிலும் பத்தாயிரம் தியேட்டர்களில் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2007ல் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியான சிவாஜி படம் முதன்முறையாக ஆயிரம் தியேட்டர்களில் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டது. அப்போதைக்கு அதுவே பெரிய சாதனையாக கருதப்பட்டது. ஆனால், இப்போது 2018ல் வெளியாகும் 2.0 படம், 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி மாபெரும் சாதனை படைக்கப்போகிறது.