மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி நடிப்பில் உருவாகி வரும் 'பேட்ட' படத்தின் போஸ்டரில் 'பொங்கலுக்கு பராக்' என்று அறிவித்தது. இதனால் ஏற்கனவே பொங்கல் வெளியீட்டை உறுதி செய்திருந்த விஸ்வாசம் படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிம்பு நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்த வாட்ச்மேன், ஆர்.ஜே.பாலாஜி நடித்துள்ள எல்.கே.ஜி. ஆகிய படங்கள் பொங்கலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படங்கள் பொங்கல் பந்தயத்திலிருந்து பின்வாங்குவதைத்தவிர வேறுவழியில்லை.
பேட்ட வருவதால் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வருவதில் ஏதும் மாற்றம் உண்டா?
விஸ்வாசம் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து பொங்கல் வெளியீட்டை எங்களுக்கு உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மீதமுள்ள படக்குழுவினர் போஸ்டரில் அறிவித்தாலும், எங்களுக்கு முறையான அறிவிப்பு இன்னும் வரவில்லை என்கின்றனர் விநியோகஸ்தர்கள்.