பத்து தல-க்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை : பர்ஸ்ட் லுக்கும் வெளியீடு | தைப்பூசத்திற்கு களத்தில் சந்திப்போம் | தனுஷ் படத்தில் இணைந்த சூரரைப்போற்று நடிகர் | பால்கி டைரக்சனில் நடிக்கும் துல்கர் சல்மான் | ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | விருதுகளை திருப்பி தருகிறேனா? - இளையராஜா விளக்கம் | மீனா விடுத்த சவால் |
கடந்த ஆண்டு வெளிவந்து நயன்தாராவுக்கு பாராட்டுகளையும், விருதுகளையும் அள்ளித்தந்த படம் அறம். வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற படம். இதனை நயன்தாராவின் மானேஜர் கொட்டப்பாடி ராஜேஷ் தயாரித்திருந்தார். நயன்தாராவின் தயாரிப்பு என்றும் சொல்வார்கள். புதுமுக இயக்குனர் கோபி நயினார் இயக்கினார்.
தற்போது அறம் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது. நயன்தாரா நடிக்கிறார். இதனையும் கோபி நயினாரே இயக்குவதை உறுதிப்படுத்தியிருக்கிறார். அறம் முதல் பாகம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒரு சிறுமியை காப்பாற்ற போராடும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரின் கதை. அந்த கதையின் வழியாக அரசு இயந்திரங்களை கடுமையாக விமர்சித்தார் கோபி நயினார்.
இரண்டாம் பாகத்தின் கதை அரசு சொல்படி நடக்காத மாவட்ட ஆட்சித் தலைவர் நயன்தாரா சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் ஆத்திரமடையும் நயன்தாரா பதவியை ராஜினாமா செய்து விட்டு மக்களுக்கான ஒரு இயக்கம் தொடங்கி போராடுவது மாதிரியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு இருக்கிற அரசியல் கட்சிகள், இயக்கங்களை கடுமையாக விமர்சிக்கும் படமாக இது அமையும்என தெரிகிறது.