100 கோடிக்கு மேல் விற்கப்பட்டதா 'ஜனநாயகன்' ? | ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கிர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் |

கமல் நடித்த ஹே ராம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் வசுந்தராதாஸ். அதன் பிறகு அஜித்துடன் சிட்டிசன் படத்தில் நடித்தார். ஏராளமான இந்தி, மலையாளப் படங்களில் நடித்துள்ளார். வசுந்தரா தாஸ் அடிப்படையில் ஒரு பாடகி. தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கும் வசுந்தரா, பெங்ளூரில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று அவர் தனது காரில் உறவினர் ஒருவர் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பினார். காரை அவரே ஓட்டினார். ராஜாஜி நகர் சிக்னலில் கார் நின்றபோது பின்னால் நின்ற காரின் டிரைவர் ஹாரன் அடித்து தனக்கு வழிவிடுமாறு கூறியிருக்கிறார். சிக்னல் விழாததால் வசுந்தரா காரை எடுக்கவில்லை.
அதன் பிறகு பின்னால் வந்த காரின் டிரைவர் வசுந்தரா தனக்கு வழிவிடாத ஆத்திரத்தில் அவரது காரை துரத்தி உள்ளார். மல்லேஸ்வரத்தில் அவரது காரை வழிமறித்து நிறுத்திய டிரைவர் வசுந்தராவிடம் தகராறு செய்துள்ளார். தகாத வார்த்தைகளில் திட்டியுள்ளார். கையை பிடித்து இழுத்து தாக்கவும் முயன்றதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் பொதுமக்கள் கூடவும் டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வசுந்தராதாஸ் மல்லேஸ்வரம் போலீசில் புகார் கொடுத்துள்ளார். போலீசார் தப்பி ஓடியை டிரைவரை தேடி வருகிறார்கள்.




