மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
தமிழிலும் மலையாளத்திலும் நடிப்பிற்காக பேசப்படும் நடிகர்கள் தான் விஜய் சேதுபதியும், பஹத் பாசிலும். இந்த இருவருமே தற்போது இணைந்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்கள். விஜய்சேதுபதி திருநங்கை கேரக்டரில் நடித்துள்ளார். பஹத் பாசில் கேரக்டர் சஸ்பென்சாகவே வைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் பஹத் பாசில் நடிப்பை பற்றி சிலாகித்து கூறியுள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. கடந்த வருடம் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'தொண்டிமுதலும் திரிக்சாட்சியும்' என்கிற படத்தை பார்த்ததிலிருந்து பஹத் பாசிலின் நடிப்புக்கு தான் ரசிகனாகி விட்டதாக கூறியுள்ளார் விஜய்சேதுபதி.
மேலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் தனக்கு படப்பிடிப்பு இல்லை என்றாலும் கூட, தனக்கு நேரம் கிடைத்தால் பஹத் பாசிலின் நடிப்பை பார்ப்பதற்காகவே சூப்பர் டீலக்ஸ் படப்பிடிப்புக்கு அவ்வப்போது தான் சென்று வந்ததாகவும் அவர் நடிப்பை நேரில் பாத்து வியந்து போனதாகவும் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார் விஜய்சேதுபதி