'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
செல்பி எடுத்த வாலிபரின் மொபைலை தட்டிவிட்ட நடிகர் சிவகுமார், நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான் என, கூறியுள்ளார். மதுரையில், நேற்று முன்தினம் நடந்த, தனியார் நிகழ்ச்சி ஒன்றில், நடிகர் சிவகுமார் பங்கேற்றார். அப்போது, வாலிபர் ஒருவர், மொபைல் போனில் செல்பி எடுத்தார். இதனால், கோபமடைந்த சிவகுமார், அவரது மொபைல் போனை, கீழே தள்ளி விட்டார். இந்த காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது; விமர்சனத்திற்கும் உள்ளானது.
இதுகுறித்து, சிவகுமார் அளித்த பேட்டி: தனிப்பட்ட முறையில், செல்பி எடுப்பது, அவர் குடும்ப விஷயம்; அதைப்பற்றி, நான் ஏதும் கூற விரும்பவில்லை. ஆனால், ஒரு பொது இடத்தில், 300 பேர் பங்கேற்கும் விழாவில், சம்பந்தப்பட்டவரின் அனுமதியின்றி, செல்பி எடுப்பது நியாயமா? விமான நிலையம் மற்றும் திருமண விழாக்களில், பல ஆயிரம் பேருடன், மொபைல் போனில் படம் எடுக்க, போஸ் கொடுத்துள்ளேன். நான் புத்தன் இல்லை; நானும் மனிதன் தான். எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். என்னை தலைவனாக ஏற்க வேண்டாம். ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில் ஹீரோ தான். மற்றவர்களை நாம் எந்தளவு துன்புறுத்துகிறோம் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.