விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு |
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் அவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது. ஆனால் அதன்பிறகு அவர் நடித்த படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில, தற்போது கணேசா இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து திரைக்கு வரவிருக்கும் திமிரு புடிச்சவன் படத்தை அவர் இன்னொரு பிச்சைக்காரனாக கருதுகிறார்.
இந்த படம் எனக்கு கண்டிப்பாக இன்னொரு பிச்சைக்காரனாக இருக்கும். அந்த படத்தைப்போன்று வெற்றி பெரும் என்று கூறும் விஜய் ஆண்டனி, இந்த படத்தில் அதிரடியான போலீசாக நடித்துள்ளார். ஆனபோதும் பல காட்சிகளில் காவி வேஷ்டி, நெற்றியில் விபூதி அணிந்து பிச்சைக்காரன் பாணியில் தோன்றுகிறார்.
அதுமட்டுமின்றி பிச்சைக்காரன் படத்தில் இடம் பெறுவது போன்ற பக்தி மணம் கமழும் ஆவேச பாடல்களும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது.