விக்ரமிற்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த் | கூலி படத்தில் வலிமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் : ஸ்ருதிஹாசன் | கீரவாணிவுடன் கம்போசிங் பணியில் ராஜமவுலி | வார் 2 படத்திற்காக மீண்டும் சிக்ஸ்பேக்கிற்கு மாறிய ஜூனியர் என்டிஆர் | கூலி படத்தில் ரஜினிக்காக லோகேஷ் கனகராஜ் செய்த மாற்றம் | தலைவன் தலைவி, மாரீசன் படங்களின் முதல் நாள் வசூல் எவ்வளவு? | மணிகண்டனை இயக்குனர் தியாகராஜன் குமார ராஜா | கருப்பு படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முயற்சி பண்றோம் : ஆர்.ஜே. பாலாஜி | பிரசாந்த் படத்தில் அறிமுகமாகும் பிரபலங்களின் வாரிசுகள் | திருமணம் செய்யாமலேயே கர்ப்பம் ஆன பாவனா |
தமன்னாவும், தெலுங்கு ஹாட் ஸ்டார் ராம் சரணும் இணைந்து நடித்த ரச்சா படம் மெகா ஹிட் ஆனதில் இருந்து இருவரும் நண்பர்களாகி விட்டனர். அடிக்கடி இருவரும் சந்தித்து தங்களது சொந்த வாழ்க்கையை பற்றி பேசி வருகின்றனர்.
சமீபத்தில் இரண்டு பேரும் சந்தித்து ஹாயாக பேசிக் கொண்டிருந்தனராம். அப்போது தமன்னா, என்னுடன் ஜோடியாக நடித்த நடிகர்களுக்கெல்லாம் உடனே கல்யாணமாகி விடுகிறது. கார்த்தி, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜூன் ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. ஏன் நீங்களும் கூடத்தான் என்று கூறினாராம்.
அதைக் கேட்ட ராம் சரண் ரொம்ப கூலாக, அப்படியானால் உங்களுக்கும் கல்யாணம் ஆக, நீங்க உடனே ராணா டகுபதியுடன் ஜோடி போட்டு நடிங்க, என்றாராம். ராணாவுடன் ஜோடியாக நடித்த ஜெனிலியாவுக்கு உடனே கல்யாணமானதை வைத்து இப்படிப் பதிலளித்தாராம் ராம் சரண். அவரது பதிலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம் தமன்னா...