மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
சினிமாவில் பல படங்களில் ஒரு பாடலுக்கும், குணச்சித்ர நடிகையாகவும் நடித்தவர் சுஜா வருணி. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இவரும் நடிகர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜி தேவ்வும் நீண்டகாலமாக காதலித்து வந்தனர். சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் அதை மறுத்தார்.
இந்நிலையில் இருவரின் திருமணம் உறுதியாகி உள்ளது. சுஜாவிற்கு இன்று பிறந்தநாள், இதையொட்டி சிவாஜி தேவ், டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுஜா, உன் கனவு நிறைவேறி விட்டது புதுப்பொண்ணு. எங்களின் திருமணம் நவ., 19-ம் தேதி நடத்துவது என முடிவாகி உள்ளது என பதிவிட்டிருக்கிறார்.