ஆரியின் வெற்றி பொறுப்புள்ள குடும்பப் பிள்ளைகளின் வெற்றி: சேரன் | 'இன்று நேற்று நாளை 2' துவக்கம் | விருமாண்டி உடன் இணைந்த சசிகுமார் | கட்டில் போஸ்டர் வெளியீடு | பிரசாத் ஸ்டுடியோவால் மன உளைச்சல் : விருதுகளை திருப்பி தர இளையராஜா முடிவு | மீனா விடுத்த சவால் | தனுஷ் படத்தில் உஷாரான கார்த்திக் நரேன் | குஷ்பு வீட்டில் மதிய உணவு சாப்பிட்ட விஜய் சேதுபதி | 'மாஸ்டர்' - ஹிந்தியில் படுதோல்வியா ? | கமல் துவக்கி வைத்த 'கேங்ஸ்டர் 21' |
தெலுங்குத் திரையுலகின் இளம் ஸ்டார் ஆன விஜய் தேவரகொண்டா தமிழில் அறிமுகமான படம் 'நோட்டா'. இப்படம், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த வாரம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப்படம் தெலுங்கு ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை.
விஜய் தேவரகொண்டாவை ஒரு காதல் நாயகனாகவே பார்த்துப் பழகியவர்கள் அவரை முதல்வர் கதாபாத்திரத்தில் அதிகம் ரசிக்கவில்லை. படத்தில் காதல் காட்சியே இல்லை என்பதும் ஒரு காரணமாக அமைந்தது. மேலும், விஜய்யை ஆக்சன் ஹீரோவாகப் பார்ப்பதில் மற்ற முன்னணி தெலுங்கு ஹீரோக்களின் ரசிகர்களும் விரும்பவில்லை. அதனால், அவர்களும் படத்திற்கான நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.
இருப்பினும் படம் முதல் நாளிலும், முதல் வார இறுதியிலும் எதிர்பார்த்தது போலவே நல்ல வசூலைக் கொடுத்துள்ளது. முதல் வார இறுதியில் மூன்று மாநிலங்களிலும் சேர்த்து 25 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. படத்தின் தியேட்டர் உரிமை 25 கோடி என்பதால் இப்படம் நஷ்டத்திலிருந்து தப்பித்துவிடும் என்கிறார்கள். இன்னும் சாட்டிலைட் டிவி உரிமை, டிஜிட்டல் உரிமை ஆகியவையும் உள்ளதால் தயாரிப்பாளருக்கு இந்தப் படம் லாபத்தைக் கொடுத்துவிடும்.
ஒரு சில ஏரியாக்களில் மட்டும் கொஞ்சமாக நஷ்டம் வரலாம் என்கிறார்கள். படத்தில் இன்னும் அதிகமான அரசியல் வசனங்களையும், விறுவிறுப்பான திரைக்கதையையும் இயக்குனர் அமைத்திருந்தால் இந்தப் படம் இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியிருக்கும் என கோலிவுட்டில் பலரது விமர்சனமாக உள்ளது.