'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தனுஷ் தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கி உள்ள படம் வடசென்னை. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஆனால் முதலில் ஐஸ்வர்யா, வேறொரு கேரக்டரில் நடிப்பதாக இருந்தது. அதில் நடிக்க மறுத்ததால் தற்போது அவர் நடித்துள்ள கேரக்டர் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது:
வட சென்னை படம் ஆரம்பித்த உடனேயே அதில் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று ஆசைப்பட்டேன். பலர் மூலம் வெற்றி மாறனுக்கு தூதும் விட்டேன். ஒரு நாள் அவரிடமிருந்து போன் வந்தது. அதில் ஒரு கேரக்டரை சொல்லி நடிக்கச் சொன்னார். அது சிறிய கேரக்டர் நடிக்க மறுத்து விட்டேன். அதன் பிறகு தனுஷ் ஜோடியாக நடிக்க இருப்பதாக பலரின் பெயர்கள் வெளிவந்தது. .
மீண்டும் ஒரு நாள் வெற்றி மாறன் அழைத்தார். சின்ன கேரக்டர் வேண்டாம் என்றேன். தனுசுக்கு ஜோடி நீதான் என்றார் ஆசையாக ஓடிவந்தேன். டெஸ்ட் ஷூட் வைத்தார். அதில் தேர்வானேன். அதன் பிறகுதான் எனக்குத் தெரியும். இந்த கேரக்டரில் நடிக்க முதலில் முடிவு செய்தது என்னைத்தான் என்று அதன் பிறகு பலருக்கும் சென்று கடைசியில் எனக்கே வந்தது.