ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் |
நடன இயக்குனர்கள் ஹீரோக்களாக மாறியது போன்று, சண்டை இயக்குனர்கள் ஹீரோக்களாகிறார்கள். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் ஸ்டண்ட் சிவா. லவ் டூடே படத்தின் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமான ஸ்டண்ட் சிவா, இதுவரை 60 படங்களுக்கு மேல் பணியாற்றி உள்ளார்.
பிஸ்தா, தலைமுறை, சேது, ராஜஸ்தான், விண்ணுக்கும் மண்ணுக்கும், சிம்மராசி, நந்தா, அருள், பேரழகன், வேட்டையாடு விளையாடு, நேபாளி, அனேகன், நிமிர்ந்து நில், தொடரி, இந்திரஜித், இமைக்கா நொடிகள் ஆகியவை முக்கியமான படங்கள். தற்போது கும்கி 2ம் பாகத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் வேட்டையன் என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். வாட்டக்குடி இரணியன், ஜித்தன், யூத் படங்களை இயக்கிய வின்செண்ட் செல்வா இயக்குகிறார். நேகா, யோகி பாபு, ரோபோ சங்கர், சார்லி, நந்தா சரவணன், அப்புக்குட்டி உள்பட பலர் நடிக்கிறார்கள். நிமோ புரொடக்ஷன் சார்பில் பாலு தயாரிக்கிறார், வி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார், அச்சு ராஜாமணி இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் பூஜையுடன் நேற்று தொடங்கியது.