மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் பேட்ட படத்தின் படப்பிடிப்பு லக்னோவில் நடைபெற்று வருகிறது. சிம்ரன், த்ரிஷா, நவாஸுதீன் சித்திக், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ், சனந்த் ரெட்டி, குரு சோமசுந்தரம் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரஜினியின் 165-வது படமான பேட்ட, கதை ஊட்டியில் நிகழ்கிறது. ஆனால் டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய பகுதிகளில் தான் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
பேட்ட படத்தில் முன்னாள் ராணுவ வீரராக இருந்து, ஹாஸ்டல் வார்டனாக வேலை செய்பவராக ரஜினி நடிக்கிறார். தற்போது லக்னோவில் நடைபெறும் படப்பிடிப்பில் ராணுவ வீரராக நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.