ஒரே டயலாக்கை வைத்து சூப்பர் டீலக்ஸ் டிரைலர் | கல்லூரி பேராசிரியராக நந்திதா | பிரபாஸ் மீது எனக்கு ஈர்ப்பு : வரலட்சுமி | திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடுகிறார் லட்சுமி மேனன் | "அம்மன், அருந்ததி" புகழ் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா காலமானார் | ராதிகா ஆப்தே வெளியிட்ட அதிரடி புகைப்படம் | ராட்சசன் - தெலுங்கு ரீமேக் ஆரம்பம் | சிவா இயக்கத்தில் விஜய் நடிக்க பேச்சு வார்த்தை ? | பிரியாணி விருந்து : அஜித் வழியில் சூர்யா | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பொன் மாணிக்கவேல் |
1972ம் ஆண்டு வெளிவந்த படம் வசந்த மாளிகை. சிவாஜி, வாணிஸ்ரீ, கே.பாலாஜி, சாந்தகுமாரி, நாகேஷ், பண்டரிபாய், மேஜர் சுந்தர்ராஜன், வி.கே.ராமசாமி உள்பட பலர் நடித்திருந்தார்கள். கே.வி.மகாதேவன் இசை அமைத்திருந்தார். ஏ.வின்செண்ட் ஒளிப்பதிவு செய்திருந்தார். கே.எஸ்.பிரகாஷ் ராவ் இயக்கி இருந்தார். டி.ராமநாயுடு தயாரித்திருந்தார்.
காலத்தால் அழிக்க முடியாத காதல் காவியமாக வெளிவந்து வெள்ளி விழா கண்ட படம். கே.வி.மகாதேவன் இசையில், கவியரசு கண்ணதாசன் எழுதிய, "மயக்கம் என்ன", "கலைமகள் கைபொருளே", "இரண்டு மனம் வேண்டும்", "ஏன் ஏன் ஏன்", "யாருக்காக" போன்ற பாடல்களை டி.எம்.சௌந்தரராஜன், பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் பாடி இன்றளவும் அந்த பாடல்கள் வலம் வந்து கொண்டே இருக்கிறது.
தற்போது இந்தப்படம் 46 ஆண்டுகளுக்கு பிறகு டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது. வி.சி.குகநாதன் மேற்பார்வையில் டிஜிட்டல், ஒலி, ஒளி அமைப்புகளை சீராக்கி, கலர் சரிபார்த்து, புதிய பரிமாணத்தில் தயாராகி உள்ளது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிக திரையரங்குகளில் வெளியிட உள்ளது.