'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பெங்காலி நடிகையாக இருந்து தொட்டாசினுங்கி படத்தின் மூலம் தமிழ் நடிகை ஆனவர் தேவயானி. கிளாமர் இல்லாத குடும்ப பாங்கான கேரக்டர்கள் மூலம் ரசிகர்களையும், பெண்களையும் கவர்ந்தவர். தனது கணவர் ராஜகுமாரன் இயக்கிய திருமதி தமிழ் படம் தான் கடைசியாக அவர் ஹீரோயினாக நடித்தது. அதில் ராஜகுமாரன் ஜோடியாகவே நடித்தார். அதற்கு முன்பே அக்கா, அண்ணி, கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.
தற்போது களவாணி மாப்பிள்ளை படத்தின் மூலம் மாமியாராகியிருக்கிறார். படத்தில் அவர் தினேஷின் மாமியாராகவும், அதிதி மேனனின் தாயாகவும் நடித்துள்ளார். இதனை பழம்பெரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் இயக்கி உள்ளார். சரவணன் அபிமன்யூ ஒளிப்பதிவு செய்துள்ளார். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். படம் பற்றி காந்தி மணிவாசகம் கூறியதாவது:
என் அப்பா மணிவாசகம் ஒரு பார்முலா வைத்திருப்பார். மெலிதான ஒரு கதையில் நிறைய கமர்ஷியல் ,நிறைய காமெடி வைத்திருப்பார். அதன் படி அவர் இயக்கிய எல்லா படங்களுமே கமர்சியல் வெற்றி பெற்றது. அதைத் தான் நானும் தொட்டிருக்கிறேன். பக்கா பேமிலி சப்ஜெக்டுடன் காமெடியை மிக்ஸ் செய்திருக்கிறேன். வழக்கமாக மாமியார் மருமகள் கதைகள் தான் சினிமாவில் வந்திருக்கிறது, ஜெயித்திருக்கிறது. மாமியார், மருமகன் கதைகள் அத்தி பூத்தாற்போல் வரும். அமோக வெற்றி பெறும். அப்படித் தான் இது உருவாக்கப்பட்டிருக்கிறது.