'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா கதையின் நாயகியாக நடித்து வரும் படம் காற்றின்மொழி. இந்த படத்தில் ஜோதிகாவுக்கு ஜோடியாக மைனா விதார்த் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து விதார்த் கூறும்போது, இந்த காற்றின் மொழி படத்தில் என்னை நம்பி பெரிய கேரக்டரை கொடுத்துள்ளார் ராதாமோகன். அதோடு என்னை திருப்திபடுத்த வேண்டாம் . ஆச்சர்யப் படுத்துங்கள் என்று சொன்னார்.
மேலும், முதல்நாளே ஐந்து நிமிசம் கொண்ட ஒரு காட்சியை கொடுத்து ஜோதிகா மேடத்துடன் நடிக்க சொன்னார். சிங்கத்துடன் நடிக்க வேண்டும் என்றதும் பயந்தேன்.
ஆனபோதும், அந்த காட்சி முதல் டேக்கிலேயே ஓகே ஆனது. டைரக்டர் ஓடிவந்து என்னை கட்டிப்பிடித்துக்கொண்டார். ஆக, அவர் சொன்னது போலவே அந்த கேரக்டரில் நடித்த முதல் காட்சியிலேயே அவரை ஆச்சர்யப்படுத்தி விட்டேன். அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது என்கிறார் விதார்த்.