ஸ்ருதிஹாசனின் இரண்டாவது காதல் பிரிவு? - காரணம் என்ன? | மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி |
சிம்பு - ஹன்சிகா நடித்த 'வாலு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விஜய் சந்தர். சந்தானம், விடிவி கணேஷ் இருவரும் காமெடி வேடங்களில் நடித்த இந்தப்படம் பல வருடங்கள் முடங்கிக் கிடந்து பிறகு ஒருவழியாக 2015-ஆம் ஆண்டு ரிலீஸானது.
இந்தப்படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடித்த 'ஸ்கெட்ச்' படத்தை இயக்கினார் விஜய்சந்தர். விக்ரமுக்கு ஜோடியாக தமன்னா நடித்த இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார். இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் ரிலீஸானது.
இந்நிலையில், விஜய் சேதுபதியை வைத்து தன்னுடைய அடுத்தப் படத்தை இயக்குகிறார் விஜய் சந்தர். இந்தப் படத்தை விஜயா புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 2019 ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க இருக்கிறது.
இந்தப்படத்தில் முதலில் சிம்பு தான் நடிப்பதாக இருந்தது. சம்பளம், கால்ஷீட் போன்றவைகள் ஒத்து வராததால் சிம்பு வேண்டாம் என்று தீர்மானித்த தயாரிப்பாளர் விஜய் சேதுபதியை கமிட் பண்ணிவிட்டனர்.