மே 10 ரிலீஸில் இணைந்த ரசவாதி | நடிகர் சங்கத்திற்கு நெப்போலியன் ஒரு கோடி நிதி | ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி |
சூர்யாவின் 2டி நிறுவனமும், சத்யம் தியேட்டர் நிறுவனத்தின் மூவிபப் நிறுவனமும் இணைந்து குறும்பட போட்டிகளை 2வது ஆண்டாக நடத்தியது. இதில் கல்கி என்ற படத்தை இயக்கி விஷ்ணு முதல் பரிசான 3 லட்சத்தை பெற்றார். கம்பளிபூச்சி என்ற படத்தை இயக்கிய வி.ஜி.பாலசுப்பிரமணியம் இரண்டாவது பரிசான 2 லட்சத்தைப் பெற்றார். பேரார்வம் என்ற படத்தை இயக்கிய சாரங்தியாகு 1 லட்சம் மூன்றாம் பரிசு பெற்றார். பரிசுகளை வழங்கி சூர்யா பேசியதாவது:
ஒரு படம் எடுப்பது .சுலபம்.ஆனால் நல்லபடம் எடுப்பது போருக்கு போவது மாதிரி அதையம் தாண்டி கல்ட் படங்கள் எடுப்பது என்பதெல்லாம் பேரதிசயம் மாதிரி. எந்த ஒரு விஷயம் பண்ணும்போதும், இன்னும்கொஞ்சம் நன்றாக பண்ணியிருக்கலாமோன்னு நினைத்தால் அதை அப்போதே உடனே சரிசெய்து விடவேண்டும் எங்கேயும் குறைவந்துவிட கூடாது . அதனால் குறும்படங்கள் என்றாலும் அதில் சிறிய குறைகூட வந்துவிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் உங்கள் வாழ்நாளையும் தாண்டி இதுதான் உங்களுக்கான முக்கியமான பதிவாக இருக்கப்போகிறது.
நிஜத்தில் நமக்கு நீதி கிடைக்கிறதோ இல்லையோ இதுபோன்ற குறும்படங்களின் மூலம் நீதியை நிலைநாட்ட முடியும். பார்த்த ஒரு சில நபர்கள் மனம் திருந்தினாலே அது நமக்கு கிடைத்த வெற்றிதான். பெற்றோர், பள்ளிக்கூடம், இந்த சமூகம் சொல்லி கேட்காதவர்கள் சினிமா பார்த்து திருந்தினேன் என்று சொன்னால் அதுதான் சினிமாவின் பலம்.
இன்று எட்டு கோடி மக்களில் 50 லட்சம் பேர் படம் பார்த்தால் படம் ஹிட்.. 80 லட்சம் பேர் பார்த்தால் அது மெகா ஹிட்.. எது உங்கள் மனதுக்கு நெருக்கமாக அதை செய்யுங்கள் .இந்த மார்க்கெட் ஒப்பனனானது. இதில் பாலும் விற்கலாம் கள்ளும் விற்கலாம்.. இரண்டுமே விலைபோகும். ஆனால் எதை விற்கவேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்யவேண்டும். இவ்வாறு சூர்யா பேசினார்.